இன்றைய ராசிபலன்கள் !.உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் ?

Estimated read time 1 min read

Today horoscope-பங்குனி மாதம் 2 ம் தேதி[ மார்ச் 15 ,2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று நீங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக அமையும். இன்றைய நாளில் நன்றாக திட்டமிட்டு செயல்களை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும் .இன்று குறைந்த அளவை பணம் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம் மேற்கொள்வது அவசியம்.

ரிஷபம்:

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். பணியிடத்தில் கவனச் சிதறலுக்கு ஆட்படுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் துணையுடன் சாந்தமான அணுகுமுறை வேண்டும். இன்று பணத்தை கவனமாக கையாள வேண்டும் .ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

மிதுனம்:

இன்று நீங்கள் கவனமாக இருப்பது நல்லது ,நடப்பவைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் கவனமாகவும் திட்டமிட்டும் செயல்படுத்தல். பணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உங்கள் துணையுடன் கலந்தாலோசிப்பதன் மூலம் வழி கிடைக்கும். செலவுகள் அதிக அளவில் காணப்படும். உங்கள் தந்தையின் உடல் நலம் பாதிப்பு ஏற்படலாம்.

கடகம்:

இன்று உங்கள் எதிர்காலத்தை பற்றி கனவு காண்பீர்கள், முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் சமநிலையான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும் .பண வரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உங்களை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சிம்மம்:

இன்று நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள் கூட சிறந்த பலன்களைத் தரும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள், துணையிடம் மிகுந்த அன்பை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

இன்று மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள், பாடல்கள் கேட்பதன் மூலம் அழுத்தம் குறையலாம். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் .பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்:

நீங்கள் இன்று வெளியிடங்களுக்கு செல்வது நல்லது .பணியிடத்தில் உங்கள் முயற்சிக்கு பாராட்டை பெறுவீர்கள் .உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்கவும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.

விருச்சிகம்:

இன்று முன்னேற்றகரமான நாள். பல தடைகளையும் தகர்த்தெறிவீர்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நேர்மையாக இருப்பீர்கள் .பண வரவு அதிகமாக காணப்படும் .ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

தனுசு:

இன்று எல்லா விதத்திலும் சிறந்த செழிப்பான நாள். புதிய பணிக்கான வாய்ப்புகள் கிடைக்கும் .உங்கள் துணையுடன் நல்ல அன்பை பராமரிப்பீர்கள். பண வரவு அதிக அளவில் காணப்படும். ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படுவீர்கள்.

மகரம்:

உங்களை நீங்களே உற்சாகப் படுத்தி கொள்ள வேண்டிய நாள் ,வெளியிடங்களுக்கு சென்று வருவது நல்லது. பணிகளை திட்டமிட்டு செய்யவும். உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வதை தவிருங்கள். இன்று பணத்தை தேவைகளுக்கு மட்டும் செலவளியுங்கள். உங்களின் நேர்மறையான எண்ணம் ஆரோக்கியத்தையும் மன அமைதியும் தரும்.

கும்பம்:

உங்கள் மனதில் சில குழப்பங்கள் காணப்படும். பிரார்த்தனை செய்வது ஆறுதல் பெறலாம் .உங்கள் பணியில் முதலிடத்தைப் பெற திட்டமிட்டு செயல்படவும். வேலை சம்பந்தமான பதட்டத்தை துணையிடம் காட்டாதீர்கள். இன்று வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும் .செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்:

இன்று நீங்கள் நினைத்த செயலை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் திறமைக்கான பாராட்டை பெறுவீர்கள், புதிய வேலைகள் கிடைக்கும் .உங்கள் துணையுடன் உண்மையாக இருப்பீர்கள் . இன்று பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author