இன்றைய ராசி பலன்கள்.! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என தெரிஞ்சுக்கோங்க.!

Estimated read time 1 min read

Today horoscope-பங்குனி மாதம் 4 ம் தேதி [மார்ச் 17 ,2024 ]இன்றைக்கான ராசிபலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று சிறப்பான நாளாக இருக்கும், தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமையின் மூலம் நற்பெயர்களை எடுப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் .உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். இன்று அதிக பணப்புழக்கம் காணப்படும் ,ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

இன்று வளர்ச்சி குறைவாக காணப்படும். பணியில் திட்டமிட்டு செயல்படவும், மேல் அதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் ஆன உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

இன்றைய நாளில் வெற்றி பெற அனுசரித்து செல்ல வேண்டும். பணியில் கவனமாக பணியாற்ற வேண்டும் .உங்கள் துணையை வெளியிடங்களுக்கு கூட்டிச் செல்வது நல்லது. இன்று அதிக செலவு ஏற்படும் .வயிறு உபாதை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடகம்:

இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாள், ஆன்மீகத்தில் ஈடுபடுவது சிறப்பு. பணிச்சுமை அதிகமாக காணப்படும் ,பெண் ஊழியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சில குடும்ப பிரச்சனைகள் காணப்படும் .இன்று பண இழப்புகள் ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் .உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியை விரைவாக செய்து முடிப்பீர்கள், இது உங்கள் சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள், வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. பணவரவு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

உங்கள் முயற்சியின் மூலம் இலக்குகளை அடைவீர்கள், நகைச்சுவை பேச்சின் மூலம் சிறந்ததை சாதிப்பீர்கள். சிக்கலான பணிகளை கூட எளிதில் கையாள்வீர்கள். உங்கள் துணையுடன் நகைச்சுவை அணுகுமுறையை வெளிப்படுத்துவீர்கள். உங்களிடம் அதிக பணம் காணப்படும். இன்று ஆற்றலுடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.

துலாம்:

இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது அவசியம் ,முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இன்று வரவு செலவு இரண்டும் கலந்து காணப்படும் .இன்று மிக கவனமாக பயணம் செய்ய வேண்டும்.

விருச்சிகம்:

இன்றைய நாளில் நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் .பணியிடத்தில் சக பணியாளர்களுடன் சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று செலவினங்கள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும்.

தனுசு:

இன்றைய நாள் உங்கள் கையில் தான் உள்ளது. பிரார்த்தனை செய்வதன் மூலம் நல்ல வழி கிடைக்கும். கடினமான பணிகளை கையாள்வது சவாலாக உணருவீர்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும் .செலவுகள் அதிகம் செய்ய நேரலாம். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

மகரம்:

இன்று நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள். பணியிடத்தில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள், பிறருக்கு உதாரணமாக இருப்பீர்கள். இன்று முதலீடுகள் செய்வதற்கு உகந்த நாள் அதன் மூலம் பணம் கிடைக்கும் .ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

இன்று நீங்கள் அமைதியாகவும் அனுசரணையாகவும் இருக்க வேண்டும். பணியிடத்தில் கவனம் தேவை. உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மீனம்:

இன்று சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் .உங்கள் சக பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். உங்களின் அகந்தை போக்கு துணையுடன் ஆன உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

Please follow and like us:

You May Also Like

More From Author