இன்றைய ராசி பலன்கள்! உங்கள் ராசிக்கு இந்த நாள் எப்படி இருக்கும்..!

Estimated read time 1 min read

மாசி மாதம் 13ஆம் தேதி[ பிப்ரவரி 25 ,2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது, முக்கிய முடிவுகள்  எடுப்பதை தவிர்க்க வேண்டும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம். இன்று பணி சுமைகள் காணப்படும் அதனால் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் துணை இடம் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் சுமாராக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்:

இன்று உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும்,இதனை தவிர்க்க வேண்டும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலம் வெற்றி பெறலாம். உங்கள்  துணையுடனான உறவில் சகஜமான முறையை மேற்கொள்ள வேண்டும். இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, பிரார்த்தனைகள் செய்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

மிதுனம் :

இன்று அற்புதமான நாளாக இருக்கும் .இன்று மறக்கமுடியாத தருணங்கள் மகிழ்ச்சியை அளிக்கும் .உங்கள் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள் .உங்கள் துணையுடன் விருந்து நிகழ்ச்சிக்கு சென்று மகிழ்வீர்கள் .நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும் .ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது .

கடகம்:

இன்று ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் சவால்கள் காணப்படும். இன்று உங்கள் துணையுடன் வன்மையாக பழகுவீர்கள் இதை தவிர்த்தல் வேண்டும். பண பற்றாக்குறை காணப்படும் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை எண்ணெய்  பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்:

இன்று எதார்த்தமான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும். சுமாரான பலன்களை காணப்படும். உங்கள் பணிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். நிதி வளர்ச்சி திருப்திகரமாக காணப்படாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குளிர்ச்சியான உணவுகளை இன்று தவிர்த்தல் நல்லது.

கன்னி:

இன்றைய நாள் உற்சாகமாக காணப்படும்.  பணி சுமைகள் அசவுரியமும் கவலையும் அளிக்கும். உங்கள் துணையுடன் ஆன உறவில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று செலவுகள் அதிகமாக காணப்படும், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்:

இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள், இன்றைய சாதகமான பலன்களை அனுபவித்து மகிழுங்கள். பணியிட சூழல் சிறப்பாக முன்னேற்றகரமான பலன் காணப்படும். உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள். இன்று எதிர்பாராத பண வரவு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள், மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள் .உங்கள் துணையுடன் நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பீர்கள். இன்று பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

தனுசு:

இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல. உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் காணப்படும் .பண பற்றாக்குறை ஏற்படும். இன்று வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மகரம்:

இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். அமைதியாக இருப்பது நல்லது. பணியை கவனமாக செய்ய வேண்டும். சக பணியாளர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகள் செய்ய நேரலாம் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை, எண்ணெய்  பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும், புதிய வாய்ப்புகள் மூலம் பலனடைவீர்கள் . உங்கள் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்வீர்கள். உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள். நிதி வளர்ச்சி சுமூகமாக காணப்படுகிறது, ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.

மீனம்:

இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாளாக இருக்கும் .உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்பு கிடைக்கும். பணி நிமித்தமாக  பயணத்திற்கான வாய்ப்பு உள்ளது .உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். இன்று சிறிது கடன் வாங்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

The post இன்றைய ராசி பலன்கள்! உங்கள் ராசிக்கு இந்த நாள் எப்படி இருக்கும்..! appeared first on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author