இன்றைய ராசி பலன்கள்.! 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கும்?

Estimated read time 1 min read

மாசி மாதம் 6ம் தேதி [பிப்ரவரி 18, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று சில அசவுரியங்களை சந்திக்க நேரும். திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். அதிக பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் இன்று சச்சரவு ஏற்படும். தேவையில்லாத செலவுகள் செய்ய நேரிடலாம் கண் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

இன்று புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டியது அவசியம். பணிகளைச் செய்யும் போது திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் துணையுடன் ஆன உறவில் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். இன்று கடன் வாங்க நேரிடலாம். உங்கள் தாயாரின் ஆரோக்கியத்திற்காக செலவுகள் செய்யலாம்.

மிதுனம்:

இன்று கவலையுடன் காணப்படுவீர்கள் ,இறை வழிபாடு செய்வதன் மூலம் ஆறுதலை பெறலாம். இன்று பணிச்சுவை அதிகமாக இருக்கும். காரணம் இன்றி உங்கள் துணையிடம்  குற்றம் கண்டுபிடிப்பீர்கள். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,இனிப்பு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.

கடகம்:

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்கள் பணியில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் வீட்டில் நடக்கவிருக்கும் விசேஷம் பற்றி கலந்தாலோசிப்பீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

சிம்மம்:

இன்று புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்று சிக்கலான பணிகளை கூட சாதாரணமாக செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அலுவலக பயணம் சம்பந்தமாக கலந்தாலோசிப்பீர்கள் .கணிசமான பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

கன்னி:

இன்று உங்களுக்கு எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. நீங்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளது சகப் பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது,பொறுமையை கையாள வேண்டும். உங்கள் துணையுடன் உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவது நல்லது .செலவுகள் இன்று அதிகமாக இருக்கும். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

துலாம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை, பேசுவதற்கு முன் யோசித்துப் பேச வேண்டும். உங்கள் கடின முயற்சி என் மூலம் பணியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது .பண வரவு சற்று குறைந்து காணப்படும். உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

விருச்சிகம்:

இன்று நற்பலன்கள் ஏற்படும். உங்கள் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். பணியில் உங்கள் நேர்மை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியுடன் பேசுவதன் மூலம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம். தொலைதூரத்தில் இருந்து வரவேண்டிய பணம் வந்து சேரும் .ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

தனுசு:

உங்கள் திறமைகளை மேம்படுத்த இந்த நாளை பயன்படுத்துங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் பொறுமையுடன் செயலாற்ற வேண்டும். குடும்பத்தின் மீது அக்கறை பற்றி  உங்கள் துணையுடன் ஆலோசனை செய்வதன் மூலம் நல்ல புரிந்துணர்வை பெறலாம். உங்கள் கடின உழைப்பிற்காக ஊக்கத்தொகை பெறுவீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்:

இன்று உங்கள் இலக்குகளை அடைய நம்பிக்கையும், கடின முயற்சியும் அவசியம். பணிச்சுமை காரணமாக தவறுகள் நேரலாம். உங்கள் துணையுடனான உறவில் நல்லிணக்கம் பாதிக்கும். இன்று ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:

இன்று குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருக்கும், அதனால் பெரியவர்களின் ஆலோசனையை பெற வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். பண இழப்புகள் நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தியானம் மேற்கொள்வது சிறந்தது.

மீனம்:

இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். இன்று வேலைகளை திட்டமிட்டு செய்வது சிறந்தது. உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். இன்றைய பணவரவு மகிழ்ச்சியை தரும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

The post இன்றைய ராசி பலன்கள்.! 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கும்? appeared first on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author