இன்றைய ராசி பலன்கள்.!

Estimated read time 1 min read

மாசி மாதம் ஒன்பதாம் தேதி [பிப்ரவரி 2,1 2024] இன்றைக்கான ராசிபலன் பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் துணை இடம் இனிமையாக நடந்து கொள்வீர்கள். இன்று அதிக பணம் சம்பாதிப்பீர்கள், முதலீட்டிற்கான முயற்சிகளையும் எடுக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

ரிஷபம்:

இன்று சில சவால்களை சந்திக்க நேரம். ஆன்மீக ஈடுபாடு உதவிகரமாக இருக்கும். இன்று பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் ஈகோவை வெளிப்படுத்துவீர்கள். இன்று அதிக செலவினங்கள் ஏற்படலாம் .இன்று உங்கள் காதுகளில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்:

இன்று பொறுமையாக இருக்க வேண்டும், அதிகமாக சிந்திப்பதை தவிர்க்கவும் .உங்கள் சக பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.. பயணத்தின் போது பண இழப்புகள் ஏற்படலாம் கவனம் தேவை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது..

கடகம்:

இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் கவனம் திசை திரும்பலாம். பணியிடத்தில் நற்பெயரை எடுப்பீர்கள். உங்கள் துணையுடன் எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். தேவையில்லாத செலவினங்களை எதிர்கொள்வீர்கள். இன்று ஒவ்வாமை காரணமாக சளி ஏற்படும்.

சிம்மம்:

இன்று சிறந்த நாளாக இருக்கும். உங்கள் சக பணியாளர்களுடன் நல் உறவை கொண்டிருப்பீர்கள். உங்கள் நட்பான அணுகுமுறை மூலம் உங்கள் துணையை மகிழ்விக்கலாம். இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும், ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.

கன்னி:

இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க  திட்டமிட வேண்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் சிறந்த முறையில் பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் தேக ஆரோக்கியம் திடமாக இருக்கும்.

துலாம்:

கோவிலுக்கு செல்வதன் மூலம் இன்றைய நாள் சிறப்பானதாக ஆக்கிக் கொள்ளலாம். பணியிட சூழல் சிறப்பாக இருக்காது, பணியில் தவறுகள் நேரலாம். உங்கள் துணையுடன் இன்று மோதல்  ஏற்பட வாய்ப்புள்ளது சிறிய அளவில் கடன்களை வாங்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்:

உங்கள் நாளை திட்டமிட்டு செயல்பட வேண்டும் .இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். இன்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பணிகளை முடித்து விடுவீர்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு இன்று குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் முடிந்தவரை ஓய்வெடுக்கலாம்.

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு சாதமாக இருக்கும், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணிகளை கையாள்வீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்காக ஊக்கத்தொகை சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்:

இன்று உங்களுடைய இனிமையான பேச்சின் மூலம் பிறரை கவருவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் துணையுடன் இணைந்து விருந்திற்கு ஏற்பாடுகள் செய்வீர்கள். இன்றைய நாளிலை  புதிய முதலீடுகளை செய்வதற்கு பயன்படுத்தலாம் .ஆரோக்கியம் நன்றாக உள்ளது.

கும்பம்:

இன்று நம்பிக்கை குறைந்து காணப்படும் நாளாக இருக்கும் .பணியிடைச் சூழல் சாதகமாக இருக்காது, சக பணியாளர்களிடம் கவனமுடன் பழகவும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க அன்பும் அனசரணையும் தேவை. இன்று வரவை விட செலவு அதிகமாக இருக்கும். உங்களிடம் சில பதட்டங்கள் காணப்படும் நேர்மறை எண்ணத்தோடு இருந்தால்  ஆரோக்கியத்தை தக்க வைக்கலாம்.

மீனம்:

இன்று பதட்டம் காணப்படும், மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தன்னிச்சையாக  பணியாற்றுவீர்கள். இன்று உங்கள் துணையை மகிழ்ச்சி அடைய  செய்யுங்கள். உங்களிடம் குறைந்த அளவு பணமே காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

The post இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் ?இன்றைய ராசி பலன்கள்.! appeared first on Dinasuvadu.

Please follow and like us:

You May Also Like

More From Author