இன்றைய ராசி பலன்கள்..

Estimated read time 0 min read

தை மாதம் 28[பிப்ரவரி 11,2024]ந் தேதிக்கான இன்றய ரசிப்பலன்களை இங்கு காணலாம்.

மேஷம் :

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் செய்யும் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல பிணைப்பு வளரும். எதிர்பார்த்த வகையில் பண வரவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

ரிஷபம்:

இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள், மேலும் முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இருக்கும். பணிகளில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் ஆன உறவில் பரஸ்பர அன்பு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

இன்று உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நன்கு யோசனை செய்து எடுக்க வேண்டும். பணிகளை திட்டமிட்டு கையாள வேண்டும். உங்கள் துணையுடன் கவனமாக பேசுங்கள். இன்று கூடுதல் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

கடகம்:

இன்று உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். பணியின் போது வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும் ,அதனால் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் துணையுடன் நகைச்சுவை அணுகு முறையை மேற்கொள்வது நல்லது. பண பற்றாக்குறை ஏற்படும். இன்று நீங்கள் குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும் ,புதிய வேலை வாய்ப்புகள் காணப்படும். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். நிதி நிலைமை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

கன்னி:

இன்று உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் அமைதியாக பழகுவது நல்லது . புதிய முதலீடுகளில் பங்கு கொள்ள இன்று நீங்கள் திட்டமிடலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்:

இன்று அனைத்து விதத்திலும் சிறப்பான நாள். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான சாத்தியம் உள்ளது. உங்கள் துணையுடன் நல் உறவை பராமரிப்பீர்கள். இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும் ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.

விருச்சிகம்:

இன்று கட்டுப்பாடற்ற சூழ்நிலை காணப்படும். பணிகளும் அதிகமாக இருக்கும். துணையுடன் ஆன உறவில் கருத்து வேறுபாடு காரணமாக மகிழ்ச்சியான தருணங்களை கழிக்க இயலாது. பணப்புழக்கம் இன்று குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

தனுசு:

இன்று உங்கள் முயற்சியின் மூலம் வெற்றி காணும் நாள். பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் இல்லத்திற்கு விருந்தினர்கள் வருகை ஏற்படலாம், பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

மகரம்:

இன்று மனக்குழப்பம் மற்றும் பதட்டம் காணப்படும். பணியிடத்தில் தவறுகளை தவிர்க்க திட்டமிட்டு செயல்படவும். உங்கள் துணையுடன் பதட்டமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பண புழக்கம் போதுமானதாக இருக்காது. பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படலாம்.

கும்பம்:

உங்கள் லட்சியங்களை அடைய திறமைகளை நிரூபிக்க முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் பணிகளை பொறுமையாக மேற்கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மனதை அமைதியாக வைத்திருந்தால் ஆரோக்கியம் இருக்கும்.

மீனம்:

இன்று உங்கள் வளர்ச்சி பாதையில் தடைகள் காணப்படும். வேலை தொடர்பாக பயணம் செல்லலாம். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் துணையுடனான உறவில் அமைதியாக இருக்க வேண்டும். இன்று வரவு செலவு இரண்டும் சமமாக இருக்கும். ஆரோக்கியத்தை பராமரிக்க பதட்டத்தை தவிர்ப்பது நல்லது.

Please follow and like us:

You May Also Like

More From Author