துலாம் ராசிக்கு…. பண உதவிகள் கிடைக்கும்…. எதிலும் பொறுமை அவசியம்….!!

Estimated read time 0 min read

துலாம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்திற்கு குறைவிருக்காது. வியாபாரம் சம்பந்தமாக முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். அதிகாரிகளின் சந்திப்பு இனிமையானதாக அமையும். தேவையான பண உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரவு சீராக இருக்கும்.

பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றி பெறும். லாபம் கிடைக்கும். கடின உழைப்புக்கு பின் வெற்றி வரும். கவனத்துடன் செயல்படுவதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். இன்று எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொறுமை இழந்து விட வேண்டாம். பெண்களுக்கு இன்று யோகமான பலன் இருக்கும். எடுக்கும் முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

இன்று மாணவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதையும் யோசித்துப் பேச வேண்டும். கல்வி மீது முழு அக்கறை கொள்ள வேண்டும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வீர்கள். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. வெற்றி பெறுவீர்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author