மகரம் ராசிக்கு…. தேவைகள் பூர்த்தியாகும்…. ரகசியங்களை பகிர வேண்டாம்….!!

Estimated read time 0 min read

மகரம் ராசி அன்பர்களே,

இன்று மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். காரியங்கள் சுறுசுறுப்பாக செல்லும். மாற்றங்கள் ஏற்றங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. நினைத்த வாழ்க்கை அற்புதமாக நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மனம் அலைபாய்ந்தாலும் நல்லதே நடக்கும். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும்.

தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மனதில் புது தைரியம் உற்சாகம் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். முயற்சிகள் வெற்றியை நோக்கி செல்லும். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். பெண்கள் யோசித்து எந்த முடிவையும் எடுப்பீர்கள். அற்புதமாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும்.

இன்று மாணவர்கள் ஏற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்வியில் சாதிப்பீர்கள் உயர்கல்வி சிறப்பாக அமையும். இந்த நாள் மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6, 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author