அன்னைக்கு கிண்டல் அடிச்சாங்க…. காலரை தூக்கி விட்ட அண்ணாமலை…!!

Estimated read time 0 min read

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  1980க்கு பிறகு ஜன சங்கத்திலிருந்து பாரதி ஜனதா கட்சி என்கின்ற புதிய கட்சியை நாம் உருவாக்கிய போது,  அதன் பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ரெண்டே ரெண்டு எம்பிக்கள் மட்டும் தான் பாராளுமன்றத்தில் இருந்தார்கள்.

உங்களுக்கு தெரியும்….   அந்தரெண்டு எம்பிக்களில் இருந்து தேசியத்தை பற்றி பேசும்போது எல்லாம்,  அந்த பாராளுமன்ற அவையில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்மை  கேலி கிண்டல் செய்வார்கள்.  ரெண்டு பேர் பேசுறாங்க.

ஒருத்தர் பேசுறாங்க.  நீங்க எல்லாம் பேசனுமா ?  அங்கிருந்து படிப்படியாக இந்த கட்சி தன்னை வளர்த்துக்கொண்டு,  ஒரு ஒரு செங்கலாக வைத்து, இந்த கட்சியை கட்டி….  இன்னைக்கு திரும்பி பார்க்கும் போது உலகத்தினுடைய மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக நாம் மாறி இருக்கிறோம். கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் சைனா இன்னைக்கு 11 கோடி பேர் உறுப்பினராக இருக்கிறார்கள்.

நாம் 20 கோடியை  தாண்டி இருக்கின்றோம். அதெல்லாம் தாண்டி இந்தியாவிலேயே அதிகப்படியான இடத்திலே ஆட்சி செய்யக்கூடிய கட்சியாக மாறி இருக்கிறோம்.  எங்கெல்லாம் பாரதிய ஜனதா கட்சி செல்ல முடியாது என்று பேசினார்களோ,  அந்த இடத்துக்கெல்லாம் போயிருக்கின்றோம். வடகிழக்கு முழுவதுமாக பாரதி ஜனதா கட்சி சென்று இருக்கிறது,  வெற்றி அடைந்து இருக்கின்றோம் என தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author