அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு

Estimated read time 0 min read

வரும் பிப்ரவரி 15ஆம் தேதி, வியாழக்கிழமை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.

இது சார்ந்து, தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஒரு அவசர கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில், தமிழக அரசின் விதிப்படி, அரசின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய எந்தவித வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது அல்லது ஈடுபடப்போவதாக பயமுறுத்தக்கூடாது. அப்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பிப்ரவரி 15ஆம் தேதி அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும். பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author