இனி யாரும் பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்க முடியாது… தமிழக அரசின் அதிரடி ஆக்சன்…!!!

Estimated read time 0 min read

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மக்களின் வசதிக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுப்பதற்காக அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

ஒவ்வொரு வருடமும் அரசு பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும்போது உயிரிழக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

அரசு சார்பில் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி தான் பயணிக்கின்றனர்.

இதனை தடுப்பதற்காக அனைத்து அரசு சாதாரண பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதில் முதல் கட்டமாக 42 சாதாரண பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இயக்கப்படும் அனைத்து சாதரண பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author