எதையுமே பார்க்காதீங்க..! மோடியை பாருங்க… அண்ணாமலை…!!

Estimated read time 0 min read

என் மன் என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  நான் வைக்க கூடிய அன்பான  வேண்டுகோள்….  நாம் வளர்ச்சி, வளர்ச்சி என்கின்ற ஒரு பாதையில் போகிறோம்….  ஏழை என்கின்ற ஜாதி இருக்க கூடாது என்று நினைக்கிறோம். அவர்களை  முன்னேற்ற பாதையில் கொண்டு வந்து,  நடுத்தர குடும்பமாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்…

அப்படி இருக்கும்பொழுது நம்முடைய வேட்பாளர் நரேந்திர மோடி அவர்களுக்கு வேலை செய்யக்கூடிய வேட்பாளர். நரேந்திர மோடி அவர்கள் உங்களுக்கு வேலை செய்யக்கூடிய பிரதமர் அவ்வளவுதான்.  பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர் மோடி ஐயாவிற்கு வேலை செய்கிறார்,  மோடி ஐயா உங்களுக்கு வேலை செய்கிறார். அதனால் எதையும் பார்க்காதீர்கள்…  மோடி அவர்களை பார்க்கிறீர்கள்… 

மோடி கேரண்டியை பார்க்கிறீர்கள்…. மோடி கேரண்டிண்ணா….  திண்டுக்கல் பூட்டை எப்படி உடைக்க முடியாது என்று நாம் சொல்லுகிறோமோ,  மோடி கேரண்டி என்ற வாக்கை கொடுத்தால் நிச்சயமாக காப்பாற்றுவார்கள்,  அதனால் தான் மோடி கேரண்டி. இந்தியாவில் என்னென்னவெல்லாம் மோடி செய்திருக்கிறார்கள் என்றால்,  வாக்கு கொடுத்து செய்து இருக்கிறார்.

வீட்டுக்கு குடி தண்ணீர் கொடுக்கின்றேன், கொடுக்கின்றார். 6000 ரூபாய் விவசாயிக்கு கொடுக்கிறேன், கொடுக்கின்றார். அதில் நாம் ஜாதி பார்ப்பது கிடையாது….  யாரையுமே  பார்க்கக் கிடையாது…..  தமிழ்நாடா ?  கேரளாவா ?  ஆந்திராவா ? என பார்ப்பது கிடையாது என தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author