ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து குறைவு!

Estimated read time 0 min read

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இரண்டாயிரம் கன அடியாக சரிந்தது.

நேற்று முன்தினம் ஆயிரத்து 500 கன அடியில் இருந்து, 3 ஆயிரத்து 500 கன அடியாக நீர்வரத்து உயர்ந்த நிலையில், இன்று அதிகாலை வரை அதே நிலை தொடர்ந்தது.

ஆனால் காலை 10 மணி நிலவரப்படி, நீர்வரத்து இரண்டாயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இன்று மாலை மீண்டும் நீர்வரத்து உயர வாய்ப்பு இருப்பதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author