ஒரே மாதத்தில் அரசு ரூ.8000 கொடுத்திருக்கு….

Estimated read time 1 min read

அயலகத் தமிழர் மாநாட்டில் கணியன் பூங்குன்றன் பெயரில் 13 பேருக்கு தங்கப்பதக்கங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அயலகத் தமிழர் தின விழாவின் 22-ம் நாளான இன்று ‘எனது கிராமம்’ திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .அப்போது பேசிய அவர், ஒரே மாதத்தில் அரசு ரூ.8000 வழங்கியதாக மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

வெள்ள நிவாரணம் ரூ.6000, பொங்கல் பரிசு 1000., மகளிர் உரிமைத்தொகை 1000 என மொத்தம் ரூ.8000 வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொங்கலுக்கு முன்கூட்டியே பணம் வழங்கப்பட்டுள்ளதால், இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்; அதுவே, எனக்கும் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author