கார் குண்டு வெடிப்பு வழக்கு :  4 பேரை கோவை அழைத்து சென்று விசாரணை!!

Estimated read time 1 min read

கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை NIA அதிகாரிகள்  கோவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்ரவன் கோயிலின் முனபு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், சம்பவ இடத்திலேயே பலியானான்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள், 14 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் அனுமதி பெற்றனர். அவர்களை கோவை அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோவையில் அவர்கள் படித்து வந்ததாக கூறப்படும் அரபி கல்லுாரி, தொழுகை நடத்திய ஆசாத் நகர், போத்தனுார் இஸ்லாமிய கல்வி மையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author