கிருஷ்ணராயபுரம் பகுதி விவசாயிகள் ஆர்வம்

Estimated read time 0 min read

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆற்று பாசனத்தை நம்பி நெல், வாழை உள்ளிட்ட சாகுபடிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதேபோல குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கரும்பு சாகுபடி ஓராண்டு சாகுபடியாகும். கரும்பு சர்க்கரை தயாரிக்கவும், கரும்பு சக்கைகள் மின்சாரம் தயாரிப்பதற்கும் பெருமளவில் பயன்படுகிறது.

முன்பெல்லாம், கரும்பு கரணைகள் தயார் வெட்டப்பட்டு வயலில் நடவு செய்து அவற்றை வளர்த்து கரும்பு சாகுபடி செய்வார்கள். ஆனால் தற்போது கரும்பு விவசாயத்தில் அதிகளவில் நவீன யுக்திகள் பயன்படுத்தப்படுகிறது.

அதனடிப்படையில்கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஓமாந்தூர் பகுதியில் கரும்பு நாற்றங்கால் தயார் செய்து பின்னர் நடவு செய்யும் பணியை மேற்கொள்கின்றனர். இதனால் செலவு குறைகிறது என்றும், நோய் தாக்குதல் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

மேலும் வேலை யாட்களின் எண்ணிக்கையும் குறைகிறது. குறிப்பாக அதிகளவில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு நாற்றாங்கால் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு அந்த பகுதியில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கரும்பு சாகுபடியில் நிறைய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே உள்ளது. முன்பெல்லாம் கரும்பில் இருந்து கரணை வெட்டி அவற்றை சாகுபடி செய்வார்கள்.

ஆனால் கரும்பு நாற்றங்கால் சொட்டு நீர் பாசன முறையில் தயார் செய்து பயன்படுத்துகின்றனர். இதனால் செலவு குறைகிறது, மகசூலும் அதிகரிக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author