கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதெல்லாம் செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!

Estimated read time 0 min read

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் எந்தெந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் . கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அதை தயாரித்த நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் .

எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை பொருத்துதான் அதன் விளைவு இருக்கும். ரத்தம் உறைதல் பிரச்சனை வரலாம் என்று தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை அப்படிப்பட்ட தரவுகள் எதுவும் பதிவாகவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொண்டாலே போதும் . சரியான உணவு, காலையில் உடற்பயிற்சி, நல்ல தூக்கம் போன்ற பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author