சிங்கப்பூர் அமைச்சரை வீட்டுக்கு வர சொன்ன C.M ஸ்டாலின்; என்ன காரணம் தெரியுமா ?   

Estimated read time 0 min read

அயலக தமிழர் தினம் 2024 காண விருது வழங்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், அண்மையில் இதே அரங்கில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு என்பது தமிழ்நாட்டை வலுப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்கள் கொண்டாடும் மாநாடு.

இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று, சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் மாண்புமிகு சண்முகம் அவர்கள் இங்கே வருகை தந்து இருப்பது. அவர் உலக புகழ் பெற்ற தமிழர் மட்டுமல்ல, உலகமே கவனிக்கும் பதவியில் இருக்க்கும் தமிழர். நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, நான் தங்கிய இடத்திற்கே வந்து எனக்கு சிறப்பு செய்தார். நேற்று அவரை என்னுடைய வீட்டுக்கே வரவழைத்து மகிழ்ந்தேன்.

அவரை இன்றும், என்றும் வாழ்த்தி வரவேற்கின்றேன். அவரை மாதிரியே இந்த மேடையில் உலகம் எங்கும் இருக்கக்கூடிய….. பல நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு பொறுப்புகளில் இருக்ககூடிய…. அறிவால், ஆற்றலால், தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக, அமர்ந்திருக்க கூடிய அனைவரையும் நான் உள்ளபடியே மனதார வரவேற்கின்றேன், வாழ்த்துகின்றேன். அனைவரது வருகைக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவிக்கின்றேன்.

மேடையிலும், எதிரிலும் அமைந்திருக்கும் உங்களையெல்லாம் பார்க்கும் போது…. எனக்கு பெருமையா இருக்குது. முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார் என்ற உழைப்பு திறன் தான், கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழ காரணம். இப்படி புலம்பெயர்ந்த நம் தமிழ் சொந்தங்கள், அந்த நாடுகளோடு வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் முதுகெலும்பாய் இருந்து வருகின்றவர்கள் என தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author