சீட்டுக்குருவி போல செயல்படுங்க…. வீடு வீடா போங்க…. சம்பளம் இல்லாம வேலை செய்யுங்க…. அண்ணாமலை உத்தரவு…!!

Estimated read time 0 min read

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, பூத்துல வேலை பார்ப்பவர்கள்,  சக்தி கேந்திரத்தில் வேலை பார்ப்பவர்கள் நம்முடைய ஒன்றியத்தில் வேலை பார்ப்பவர்கள், சகோதரர்கள் –  சகோதரிகள் எலக்சன் என்று சொன்னவுடனே முதல் ஆளாக  சிட்டுக்குருவியை போல களத்தில் வந்து யார் வேலை செய்வார்களோ,   அவர்கள் இந்த கூட்டத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த செயல்வீரர் கூட்டம். நீங்க தான் வீடு வீடா போகணும்,  நீங்க தான் ஏறி இறங்கணும்.

நீங்க தான் மக்களை பார்க்கணும். நீங்க தான் நம்முடைய போஸ்டரை எல்லாம் கொண்டு போய் சேர்க்கணும். நீங்க தான் நம்முடைய பிட் நோட்டீஸ் எல்லாம் அடிச்சு ஓட்டணும்.ஆனால் உங்களுக்கு இதுல பாத்தீங்கன்னா….  பாரதிய ஜனதா கட்சியில்  மட்டுமே உங்களின் உழைப்புக்கு இங்கே ஊதியம் கிடையாது. மத்த கட்சி சொல்ற மாதிரி….  உங்கள் உழைப்புக்கான ஊதியமே நல்ல ஒரு தேசத்தை நிர்மாணிக்கிறோம் என்பது தான் உங்கள் உழைப்புக்கான ஊதியம்.

அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய செயல் வீரர்கள் அனைவருமே உங்களுடைய பணத்தை, உங்களுடைய நேரத்தை எல்லாத்தையும் நீங்கள் கொடுத்து….  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்….  கட்சி உங்களுக்கு எதுவுமே திரும்ப கொடுக்காமல் இருந்தாலும் கூட,  எதையும் எதிர்பார்க்காமல் நான் வாழுகின்ற இந்த பாரத நாடு நன்றாக இருக்க வேண்டும். வலிமையாக இருக்க வேண்டும். வளமாக இருக்க வேண்டும்.

என்னுடைய குழந்தைகளுக்கு ஒரு நல்ல நாடு கிடைக்க வேண்டும்.  என்னுடைய  வருங்கால சந்ததியினர் வளர்ந்த ஒரு நாட்டில் இருக்க வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதத்தில் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நீங்கள் எல்லாம் இங்கு இருக்கிறீங்க. அதனால் முதல் உங்கள் அனைவரையும் இந்த நேரத்தில் பாராட்டி ஆக வேண்டும் என தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author