சென்னைக்கு விமான வரத்து குறைவு…. ஆய்வில் வெளியான தகவல்….!!

Estimated read time 0 min read

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சென்னைக்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மாதத்திற்கு 6682 விமானங்கள் வந்த நிலையில் நடப்பாண்டில் 5678 என 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இதனால் 10,43,000 இருக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது எனவே அங்கு பார்க்கிங் உள்ளீட்ட வசதிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் விமான நிலையங்களில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் ஏரோ பிரிட்ஜ் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் விமான நிறுவனங்கள் மற்ற நகரங்களில் விமான நிலையத்தில் தங்கள் சேவையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author