சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்

Estimated read time 0 min read

சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையின் முக்கிய சாலையான ஆர்பிஐ சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில் நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
அதனால், அங்கிருக்கும் சுரங்கப்பாதை ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் நான்காவது ரயில் இருப்புப் பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், சுரங்கப் பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. 26.04.2024 இரவு 10 மணி முதல் 3 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது”.

Please follow and like us:

You May Also Like

More From Author