டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்… தவறினால் உரிமம் ரத்து : வெளியான முக்கிய அறிவிப்பு!!

Estimated read time 1 min read

டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்… தவறினால் உரிமம் ரத்து : வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சென்னை அலுவலக கடிதத்தின்படி 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தங்களது மதுக்கூட வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பணியினை திங்கட்கிழமைக்குள் செய்து முடித்து தங்களது மதுக்கூடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள புகைப்படத்தை இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க மதுக்கூட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தவறும் பட்சத்தில் மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author