தங்கம் விலை குறைஞ்சிருச்சி…!!

Estimated read time 1 min read

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ரூ.46,480-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.240 குறைந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,780-க்கு விற்கப்படுகிறது.

அதே போல், வெள்ளி ஒரு கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது.

சமீபத்தில் ரூ.47,500-ஐ தாண்டி விற்கப்பட்ட நிலையில், தற்போதைய விலைக்குறைப்பு மக்களை நகைக்கடைகளை நோக்கி இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author