தமிழகத்தில் ஆவின் ஐஸ்கிரீம்கள் இன்று முதல் விலை உயர்வு….. ரேட் இதுதான்..!!!

Estimated read time 1 min read

தமிழகத்தில் ஆவின் ஐஸ்கிரீம்கள் விலை உயர்வு இன்று முதல் அமலாகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை 5 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.

அதாவது ஆவின் சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூ.5 அதிகரித்து ரூ.25-க்கும், 125 மில்லி அளவுள்ள ஆவின் பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் விலை ரூ.30-க்கும், வெண்ணிலா கிளாசிக் கோன் விலை ரூ.5 அதிகரித்து ரூ.35-க்கும், கிளாசிக் கோன் சாக்லேட் ரூ.5 உயர்ந்து ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இடுபொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால், தற்போது 4 வகை ஐஸ்கிரீம்களின் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author