தமிழகத்தில் பிரதமர் மோடி – முழு விவரம்!

Estimated read time 1 min read

வரும் 27 -ம் தேதி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி, வரும் 27 -ம் தேதி மற்றும் 28-ம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 27 -ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

மேலும், அன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். இரவு, கோவை அடுத்துள்ள சூலூரில் இந்திய விமானப்படை தளத்தில் தங்குகிறார்.

பின்னர், 28-ம் தேதி, குலசேகரன்பட்டினத்தில் 2,233  ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி மற்றும் வ.உ.சி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகளைத் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் இரயில்வே பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர், நெல்லையில் பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author