தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்

Estimated read time 0 min read

சிவகங்கை: சாலைக் கிராமம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சாலைக்கிராமம், அய்யம்பட்டி, கலங்காதன்கோட்டை, சூராணம், ஆக்கவயல், கோட்டையூர், சிறுபாலை, வண்டல், சாத்தனூர், பஞ்சதனூர், சமுத்திரம், அளவிடங்கான், பூலாங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கரூர்: குளித்தலை கோட்டம் காவல்காரண்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலணி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், தளிஞ்சி, புத்துர், சின்னபுத்தூர், வேங்கடத்தான்பட்டி, குப்பனார்பட்டி, தனிக்கொடிபட்டி, ஆர்.டி.மலை, புழுதேரி, வடசேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், நெய்தலூர் காலனி மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கோவை: மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் இன்று (வியாழக்கிழமை) ராசிபாளையம், அருகம்பாளையம், சீபா நகர், சுப்பராயன் பாளையம், கணியூர், கொள்ளுபாளையம், ஊத்துப்பாளையம், தென்னம் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை: பொன்னமராவதி: கொன்னையூர் நகரப்பட்டி, மேலத்தானியம் துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கோவனூர், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், நகரப்பட்டி, கண்டியாநத்தம், தொட்டியம்பட்டி, மேலத்தானியம், வேந்தன்பட்டி, காரையூர் மற்றும் பொன்னமாவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற்படும். அதே போல், மாத்தூர் தொழிற்பேட்டை, குண்டூர், பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ தொழிற்பேட்டை, ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், ஆவூர் நால்ரோடு, ஆம்பூர்பட்டி, புதுப்பட்டி, செங்களாங்குடி, குலவாய்ப்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, விளாம்பட்டி, திருமலை சமுத்திரம், மற்றும் வங்காரம் பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருச்சி: லால்குடி அருகே வாளாடி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம்.
கீழப் பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேல பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாத்துரை, கீழ்மாரிமங்கலம், திருமங்கலம், மாந்துறை, நெய்க்குப்பை, ஆர். வளவனூர், பல்லபுரம் புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி ஆங்கரை, சரவணாநகர், தேவி நகர், கைலாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர்: சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனபாடி, கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜய கோபாலபுரம், செல்லியம்பளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, பெரகம்பி, செட்டிகுளம், அயிலூர், காரை நீர் ஏற்றும் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதே போல், எசனை துணை மின் நிலையத்திற்குட்பட்ட கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலாம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டா புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் மற்றும் காவிரி நீர் ஏற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.

வேலூர்: காட்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. காட்பாடி காந்தி நகர், வி.ஜி. ராவ்நகர், செங்குட்டை, கல்புதூர், காங்கேயநல்லூர், வன்றந் தாங்கல், கழிஞ்சூர், வஞ்சூர், திருமணி, கிறிஸ்டியன் பேட்டை, பழைய காட்பாடி, பள்ளி குப்பம், வடுகன்குட்டை, எல்.ஜி. புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி: எறையூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி இன்சுலேட்டர் புதுப்பித்தல் மற்றும் மின் பாதைகளுக்கு இடையே மரம் வெட்டும் பணிகளுக்காக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புகைப்பட்டி, அ.குஞ்சரம், பி.குஞ்சரம், கூத்தனூர், நரிப்பாளையம், பெரிய குறுக்கை, வடுகபாளையம், எறையூர், வட குரும்பூர், எஸ்.மலையனூர், எல்லை கிராமம், கூவாடு, தேன் குணம், நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதே போல், உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி, வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூர், ஏமம், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம், நாச்சியார் பேட்டை, காட்டு நெமிலி, பு.மாம்பாக்கம், செம்மணங்கூர், உளுந்தண்டார் கோயில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், மற்றும் நகர் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி: முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையப் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. முன்சிறை, காப்புக்காடு, மாராயபுரம், விரிவிளை, நித்திரவிளை, இரயுமன்துறை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், கம்பிளார், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், இரயுமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம், குமரிநகர், அள்ளம், ஓச்சவிளை, விளாத்திவிளை, முள்ளஞ்சேரி, கல்லுக்கூட்டம், பரக்காணி, பார்த்திபபுரம் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதே போல், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர், நடைக்காவு, வள்ளவிளை ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

ஈரோடு: சத்தியமங்கலம் மின்கோட்டம் தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், ஆலாம்பாளையம், எரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு, முடுக்கன்துறை பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author