தமிழகம் வரும் ஜே.பி.நட்டா… மையக்குழுவுடன் நாளை சென்னையில் ஆலோசனை!

Estimated read time 0 min read

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை சென்னை வருகிறார். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.

நாளை சென்னை வரும் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகிறார்.

பிரதமரின் வருகைக்கு முன்பு கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் தமிழக பாஜக உள்ளது. அந்தவகையில், சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாளை மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை சின்னமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை பிற்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக மைய நிர்வாகிகள் குழு ஆலோசனை நடத்த உள்ளனர்.

மேலும், தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதன்பின் நாளை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author