தாம்பரம் – மங்களூரு சிறப்பு ரெயில்கள் 2 நாட்கள் ரத்து!

Estimated read time 1 min read

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-மங்களூரு இடையிலான சிறப்பு ரெயில்கள் 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில் தாம்பரம்-மங்களூரு சந்திப்பு இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்கள் பராமரிப்புப் பணி காரணமாக வருகிற 28-ந்தேதி மற்றும் 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும் மறுமார்க்கமான மங்களூரு சந்திப்பு முதல் தாம்பரம் வரையிலான சிறப்பு ரெயில்கள் வருகிற 29-ந்தேதி மற்றும் ஜூலை 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author