தொகுதி மக்களிடம் தற்போதே குறைகளை கேட்டறிந்த பாஜக வேட்பாளர் தமிழிசை..!

Estimated read time 0 min read

வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்

தென் சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள வாக்காளர்கள்களிடம் குறைகளை கேட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுவையில், தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரம், மற்ற ஆவணங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவுக்கு முன்பே சரி பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு சமயத்தில் சரி பார்ப்பது வாக்களிக்க வருபவர்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் என குறிப்பிட்டார்.

மேலும், தன்னிடம் பல வாக்காளர்கள் காலை 7 மணி முதல் தாங்கள் காத்திருப்பதாகவும், ஆனால் இன்னும் வாக்களிக்க முடியவில்லை என்றும் கூறியதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், அனைவரும் வாக்களிக்க வர வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை. நல்லவர்களை தேர்ந்தெடுக்க நாம் வாக்களிக்க வேண்டும். முதல் தலைமுறை வாக்காளர்கள் நிச்சயம் வாக்களிக்க வர வேண்டும். இது அவர்களுக்கு மிகப்பெரிய அனுபவம். அனைவரும் ஓட்டு போடுங்கள். இது நமது நாட்டுக்கு நல்லது என்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author