நான் முதலமைச்சர் தானா ? என்ற சந்தேகத்துடன் இருக்கிறார் ஸ்டாலின் : அதிமுக கடும் விமர்சனம்…!!

Estimated read time 1 min read

நான் முதலமைச்சர் தானா ? என சந்தேகத்துவுடன் இருக்கிறார் ஸ்டாலின் என்று முன்னாள் அதிமுக அரசு கொறடா மனோகரன் பேசியுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர், வ.உ.சிதம்பரனாரை கொச்சைப்படுத்தி பேசிய ஆண்டிமுத்து ராசாவை கண்டிக்காத, திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து, திருச்சியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இளங்காட்டு மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.

இந்த பிரச்சார கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக்கியவர் மறைந்த முதல்வர் எம்ஜிஆர். இத்தகைய பெருமைமிகு எம்ஜிரை திமுக எம்பி ஆண்டிமுத்து ராஜா கொச்சைப்படுத்தி பேசுகிறார்.

நாமக்கல் பொதுக்கூட்டத்தில் பேசிய அந்த வார்த்தையை சொல்ல எனது நாகூசுகிறது. அப்படி கொச்சைப்படுத்தி பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரை ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை. இன்று முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகமாக இருக்கின்றதே.

செக்கிழுத்த செம்மல், சுதந்திரத்திற்கு போராடிய வ.உ.சிதம்பரனாரையும் வசைப்பாடி, தனது மகனுக்கு வேலை வேண்டும் என்று தந்தை பெரியாரிடம் கடிதம் கொடுத்தார் என, ஏதோ அவர் பக்கத்தில் இருந்து பார்த்தது போல பேசும் ஆண்டிமுத்து ராஜாவை இந்த கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம். திமுக தலைமையிலான தமிழக அரசின் கையாலாகாதனத்தால் மக்கள் படும் வேதனைகளை படுகிறார்கள், என பேசினார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், கவுன்சிலர் அரவிந்தன் ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் நாகநாதர் பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author