நீலகிரி, தருமபுரியில் வரும் 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு!

Estimated read time 0 min read

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் வருகிற 6ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

நீலகிரி, தருமபுரியில் வருகிற 7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author