நுழைவுச்சீட்டு வெளியீடு…. TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

Estimated read time 1 min read

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் accounts officer, manager and senior officer ஆகிய பணியிடங்களுக்கு 52 காலியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் TNPSC combinate account service என்ற எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்து தேர்வானது கணினி வழி தேர்வு முறைப்படி வருகின்ற பிப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author