பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் இரங்கல்!

Estimated read time 1 min read

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிகை 8 -ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழகத்தின் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது.

Saddened to learn about the loss of many lives due to an explosion at a firecracker factory near Sivakasi, Tamil Nadu. I convey my heartfelt condolences to the bereaved families. I pray for speedy recovery of the injured.

— President of India (@rashtrapatibhvn) May 9, 2024

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author