பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதம் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!

Estimated read time 1 min read

தமிழக பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதம் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் (வயது 74) உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா C.வேலாயுதன் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா திரு.C.வேலாயுதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின்… pic.twitter.com/xcAgXYoQBa

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 8, 2024

கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர்.

ஐயா வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! எனக் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author