பாஜகவுக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு! – அண்ணாமலை

Estimated read time 1 min read

பாஜகவுக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அளித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியின் மீது முழு நம்பிக்கை கொண்டும், நமது பிரதமர் மோடி தமிழகத்திற்குத் தொடர்ந்து வழங்கி வரும் நலத்திட்டங்களையும், உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளையும் உணர்ந்து, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு முழு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அண்ணன் பெஸ்ட் ராமசாமி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சியின் மீது முழு நம்பிக்கை கொண்டும், நமது பிரதமர் அவர்கள் தமிழகத்திற்குத் தொடர்ந்து வழங்கி வரும் நலத்திட்டங்களையும், உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளையும் உணர்ந்து, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு முழு…

— K.Annamalai (@annamalai_k) March 2, 2024

நேர்மையான, ஊழலற்ற, சாமானிய மக்களுக்கான, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி தொடர, அண்ணன் பெஸ்ட் ராமசாமி போன்ற பெரியோர்களின் ஆதரவு, நிச்சயம் வலு சேர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author