பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

Estimated read time 1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டவளை பகுதியில் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி அருகே இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் சிங் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

மேலும் மாணவியை காரில் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சுந்தர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author