புதுச்சேரியில் சுவர் இடிந்து கோர விபத்து! உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Estimated read time 1 min read

Puducherry: புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும் போது சுவர் இடிந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து ஏற்பட்ட கோர விபத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மரப்பாலம் மின்துறை அலுவலகம் பின்புறம் வசந்தம் நகர் உள்ளது.

இப்பகுதியில் கழிவுநீர் வாயக்கால் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று மின்துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது. இப்பணியில் அரியலூர் மாவட்டம் நெட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் உள்ளிட்ட 16 பேர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மின்துறை அலுவலக சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் 6 பேர் சிக்கிக்கொண்டனர். மற்றவர்கள் சற்று தள்ளியிருந்ததால் தப்பித்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author