பௌர்ணமி கிரிவலம் : திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Estimated read time 1 min read

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே, முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர்.  குறிப்பாக, பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வதற்காக வருகின்றனர்.

பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இம்மாத பௌர்ணமியை முன்னிட்டு, வருகிற 24-ஆம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர்.  இதையொட்டி, திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 24-ஆம் தேதி காலை 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் – 06130) காலை 11.00 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் – 06129) விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும்.

மேலும், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 24-ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் – 06131) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து 25-ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் – 06132) காலை 5.00 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author