மின்கட்டணத்தை பாதியாக குறைக்க… இதோ உங்களுக்கான சில டிப்ஸ்…!!!

Estimated read time 0 min read

தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு வரும் நிலையில் துல்லியமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் அனைவரது வீடுகளிலும் மின் தேவை அதிகமாக இருக்கும். இந்த நிலையில் மின்கட்டணத்தை பாதியாக குறைப்பது தொடர்பான சில வழிகளை இதில் பார்க்கலாம்.

அதாவது அதிக வாட்ஸ் கொண்ட எல்இடி பல்புகளை பயன்படுத்துவதற்கு பதில் 15 வாட்ஸ் வரை இருக்கும் எல்இடி பல்புகளை பயன்படுத்தி வந்தால் மின்கட்டணம் பாதியாக குறையும். அதனைப் போலவே வீட்டில் ஏசி பயன்படுத்துபவர்கள் இன்வெர்ட்டர் ஏசி பயன்படுத்தினால் மின் கட்டணம் குறையும்.

மேலும் ஏசியை மிக குறைவான வெப்ப நிலையில் வைக்காமல் 24 அல்லது 25 என்ற அளவில் வைத்தால் மின் கட்டணம் குறையும்.

அதனைப் போலவே ஒவ்வொரு விஷயத்திலும் சில மாறுதல்களை செய்தால் உங்கள் வீட்டு மின் கட்டணத்தை நீங்கள் பாதியாக குறைக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author