முட்டை விலை தொடந்து உயர்வு

Estimated read time 0 min read

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், ரூ. 5.75 ஆக இருந்த முட்டை விலை, மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டது.

இதனால் ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசனுக்கு அதிக அளவில் முட்டை தேவை ஏற்பட்டுள்ளதாலும், தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதாலும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதாக முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. இதனால் முட்டை கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 580 காசுகளாக இருந்தாலும் சேலத்தில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதனால் 50 ரூபாயை கொடுத்து 10 முட்டை வாங்கியவர்கள் 7 முட்டைகளை மட்டுமே வாங்கி செல்கிறார்கள். மேலும் முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பதால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author