மேடையிலேயே தமிழிசையை எச்சரித்தாரா அமித் ஷா? வைரலாகும் வீடியோ

Estimated read time 1 min read

தமிழகத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசைக்கும், தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமித்ஷா தமிழிசையை கண்டிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாதது, தமிழக பாஜக தொண்டர்களுக்கு மட்டுமின்றி, மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
25 தொகுதிகளை இலக்காக வைத்து போட்டியிட்ட பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
எனினும் வாக்கு விகிதம் கூடியிருப்பதாக அண்ணாமலையின் விசுவாசிகள் தெரிவிக்கும் நிலையில், முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசைக்கும், தற்போதைய தலைவர் அண்ணாமலைக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுந்தது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 10- 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க முடியும் தமிழிசை கருதுவதாக கூறப்பட்டது.

https://youtu.be/MbRR-hEXdrw?si=1TN8hVrUTw3MYu4Q

Please follow and like us:

You May Also Like

More From Author