மோடி ரொம்ப Effort  போடுறாரு..! உலக அளவுக்கு பேசுறாங்க… புகழ்ந்து தள்ளிய எஸ்.வி சேகர்…!

Estimated read time 1 min read

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி சேகர், எனக்குத் தெரிந்து இந்தியாவிலேயே மிக அதிகமான Effort எடுத்துகிறது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி. உலக அளவில் அவர் புகழ் அவ்வளவு தெரிஞ்சிருக்குது. ஆனால் அந்த புகழுக்கு பேசாம, அண்ணாமலை தன்னுடைய புகழை உசத்தி கொள்வதற்காக போராடுவதால் தான் இன்னைக்கு அது பலன் எலக்சன் போது தான் தெரியும். நான் திருப்பி திருப்பி அண்ணாமலை, அண்ணாமலைன்னு சொல்லுவது நல்லா இருக்காது…

ஏனென்றால் தேர்தல் வரட்டும்… வந்து ரெண்டு வருஷம் ஓட்டிட்டாரு.. இன்னும் மூணு மாசம் இருக்கு. தேர்தல் வரப்போகுது… தேர்தல் முடிந்த உடனே அண்ணாமலை சொல்ற மாதிரி, 40க்கு 40 வருதா ? இல்ல 40க்கு 1 வருதா ? 2 வருதா? ன்னு பாத்துருவோம்… அண்ணாமலையை அதிகமாக விமர்சிக்கிறேன் என்றால், நான் 1990 இல் இருந்து பாஜக ஆதரவாளனாக இருக்கிறேன்.

ஒரு கட்சி அவ்வளவு சிறந்த கொள்கைகளோடு இருக்கக்கூடிய ஒரு நல்ல கட்சி, நேர்மையான கட்சி, இன்றைக்கு வரை டெல்லி ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், செய்து கொண்டு… மக்களோடைய நன்மைக்காக செய்யக்கூடிய ஒரு கட்சியை இன்னும் பெரிய அளவில் எடுத்துட்டு போறதுக்கு உண்டான முயற்சிகளை,

கத்துக்குட்டி அண்ணாமலை செய்யவில்லை என்பது எனது ஆதங்கம். அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக கட்சியில் இருக்க வேண்டும் என்று பார்த்தால், அது நடக்காது. அத்வனிக்கு பாரத ரத்னா விருது வழங்கியது, மிக சரியான நபருக்கு, சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

Please follow and like us:

You May Also Like

More From Author