வடக்குVSதெற்கு சொல்வதற்கு அர்த்தமே இல்லை… இப்போ எல்லாம் பேஷன் ஆகிட்டு….  குருமூர்த்தி விளக்கம்…!!

Estimated read time 1 min read

துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார். அதில் பேசிய அவர், நம் நாட்டில் மக்களை பிரித்து பேசுவது என்பது அரசியலாக ஆகிவிட்டது. இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தி சுதந்திரம் வாங்க வேண்டும் என்று ஏராளமான பெரியோர்கள், அது விவேகானந்தரில் இருந்து, ஆன்மீக துறையிலும் அரசியலையும், தேசியத்தையும் கலந்து பேசியவர்கள், மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவஹர்லால் நேரு கூட…. பல வித்தியாசங்கள் இருந்தாலும் கூட, இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்கள்.

இப்ப என்ன இருக்கிறது அரசியலில் ? எப்படி பிரிக்கலாம் ? பிரித்து எப்படி அதற்குள் நாம் புகுந்து ஓட்டு வாங்கலாம் என்ற வாக்குவங்கி அரசியல் வந்த பிறகு எத்தனை விதமா முஸ்லிம், கிறித்துவர்கள், அந்த ஜாதி, இந்த ஜாதி, அதே மாதிரி நார்த் VS சவுத். பல பேருக்கு எலக்ட்டோரல் ஹிஸ்டரியே தெரியாது.

1977இல் காங்கிரஸ் எங்கு பார்த்தாலும் நார்த்பூராம் ஒரு சீட்டு கூட வரவில்லை. குவாலியர் ஒன்றுதான் எனக்கு தெரிந்து வெற்றி பெற்றார்கள். சவுத் பூராம் காங்கிரஸ் வந்தது. அப்ப காங்கிரஸ் என்ன பிரிவினை பார்ட்டியா ? சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் மாற்றங்கள் கூட தெரியாமல்….

இப்போ ஏதோ நார்த் பார்ட்டி பிஜேபி, சவுத் பார்ட்டி மற்றவர்கள் அப்படின்னு பேசுவது அரசியலில் அவர்களுக்கு விஷயம் புரியவில்லை என்பது மட்டுமில்லாமல், இந்த மாதிரி பேசுவதே ஒரு பேஷன் ஆகிவிட்டது. அதனால் இந்த நார்த் VS சவுத் என்பதற்கு அர்த்தமே கிடையாது என்பதுதான் என்னுடைய கருத்து என விளக்கினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author