வரலாறு காணாத உச்சம் ..! ரூ.54,000 கடந்த தங்கம் விலை ..!

Estimated read time 1 min read

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியதால், பொதுமக்கள் கிறுகிறுத்துப் போயிருக்கிறார்கள்.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். இன்று ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத விதமாக உச்சம் தொட்டதுடன் சவரனுக்கு ரூ54,000-த்தை கடந்துள்ளது.

அதன்படி பார்க்கையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (12-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440-க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805-க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.90-க்கும், கிலோவுக்கு ரூ.1500 உயர்ந்து ரூ.90,000க்கும் விற்பனையாகிறது.

அதன் படி பார்க்கையில், சென்னையில் நேற்றைய நிலவரப்படி (11-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,725க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.88.50க்கும், கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.88,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author