விருச்சிக ராசிக்கு…. தடைகள் விலகும்…. வெற்றி கிடைக்கும்….!!

Estimated read time 0 min read

விருச்சிக ராசி அன்பர்களே,

இ‌ன்று எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்வீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் பிரகாசமாக உள்ளது. விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றிகள் கண்டிப்பாக அமையும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். யாரையும் சந்தேக நோக்கத்துடன் பார்க்க வேண்டாம். வாழ்க்கைத் துணை வழியில் மிகுந்த அனுகூலம் ஏற்படும்.

கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நிதானமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று எதிலும் வெற்றி கிடைக்கும். தடைகள் ஏற்படுத்திய பணி கூட சுறுசுறுப்பாக நடக்கும். பெண்களுக்கு முன்னேற்றமான வாழ்க்கை அமையும்.

எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தேவைகள் பூர்த்தியாகும். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். இன்று மாணவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். விளையாட்டு துறையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Please follow and like us:

You May Also Like

More From Author