வெற்றி துரைசாமியின் உடல் இன்று அடக்கம்.!

Estimated read time 0 min read

முன்னாள் அதிமுக சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னூர் பகுதியில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தின் ஓட்டுனர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். உடன் சென்ற நண்பர் கோபிநாத் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. சுமார் எட்டு நாட்கள் வெற்றி துரைசாமியின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்று நீச்சல் வீரர்கள் பாறைகளின் இடுக்குகளில் சிக்கி இருந்த வெற்றி துரைசாமியின் உடலை மீட்டனர்.

இதனை தொடர்ந்து மனிதநேய அறக்கட்டளை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி அவர்களின் மகனும் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனருமான வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி இமாச்சலப் பிரதேசம் கின்னூர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர் பயணம் செய்து கொண்டிருந்த வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துகுள்ளானது.

மத்திய மாநில அரசின் தொடர் முயற்சியால் 8 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது பூத உடல் பிப்ரவரி 13ஆம் தேதி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பொது இடத்தில் வைக்கப்பட்டு, பின்னர் வெற்றி துரைசாமி அவர்களின் இறுதிச்சடங்கானது இன்று மாலை 6 மணி அளவில் கண்ணம்மாபேட்டை மயானபூமியில் தகனம் செய்யப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author