ஸ்பெயினில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்..!

Estimated read time 0 min read

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஸ்பெயின் சென்றார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

ஸ்பெயினில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்புகள் விடுத்தார்.

சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலக அமைப்பில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீடுக்கு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தமானது. சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அபர்ட்டி நிறுவன அதிகாரியுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடு செய்ய அபர்ட்டி நிறுவனம் விருப்பம் தெரிவித்தது.

மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் சந்தித்து முதலமைச்சர் உரையாற்றினார். ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் உறுதியளித்தது. ஆக்சியானா, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட நிறுவன அதிகாரியிடம் முதலமைச்சர் ஸ்பெயினில் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை மேற்கொண்ட நிறுவனங்களுடன் விரைவில் புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. தனது சுற்றுப்பயணத்தின் போது ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து உரையாற்றினார். இதைதொடர்ந்து டால்கோ, எடிபன் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கும் தொழில் வாய்ப்பு பற்றி எடுத்துரைத்தார். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீடு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். 8 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை 8 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வர உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author