199ஆவது இடத்தில் சென்னை…! டோட்டலாக டேமேஜ் ஆன DMK…!!

Estimated read time 1 min read

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,   பெரிய பெரிய மாநகரத்தை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் ?  பெங்களூரு, ஹைதராபாத், புனே, கல்கத்தா எடுத்துக்கிட்டீங்களா…..  வேகமாக வேலை செய்ய வேண்டிய நகரமாக இருக்கிறது. ஆனால் சென்னை மட்டும் பார்த்தீங்கன்னா… ஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டது.  சென்னையினுடைய வளர்ச்சி என்பது அப்படியே கீழே இறங்க ஆரம்பித்துவிட்டது. அதை ரெண்டு மூணு புள்ளி வரத்தோடு நான் சொல்ல ஆசைப்படுகின்றேன்.

நேற்று நம்முடைய மத்திய அரசு இந்தியாவிலேயே தூய்மையான மாநகரங்கள் யார் யார் என பட்டியல் கொடுத்து இருக்காங்க. நமக்கு ஒரு பக்கம் மனசு கஷ்டமா இருக்குது 45,  43-வது இடத்தில் இருந்த சென்னை,  இன்றைக்கு 199 வது இடத்துக்கு இல இருக்கு. வெறும் 12% குப்பைகள் மட்டும் தான் சென்னையில் முறையாக, எடுத்து முறையாக குப்பைகளை பதப்படுத்தி,  அந்த குப்பைகளுக்கு எப்படி அப்புறப்படுத்த வேண்டுமோ, அதை செய்யுறாங்க . வெறும் 12 சதவீதம் மட்டும் தான்.

இன்னைக்கு 199 வது இடத்தில் சென்னை இருக்கு…  இந்தியாவில் இருக்கக்கூடிய நகரத்தில் நாம் எங்கேயோ பின்னாடி போயிட்டோம். அதைத் தாண்டி திருச்சி தமிழகத்தினுடைய முதன்மை நகரமாக….  தமிழகத்தில் இருக்கக்கூடிய திருச்சி 112 வது இடத்தில் இருக்கு. முதல் நகரத்தை பார்த்தீங்கன்னா….. வழக்கமா யார் இருப்பாங்க மைசூர், விசாகப்பட்டினம், விஜயவாடா இவங்க தான் முதல்ல இருப்பாங்க. காரணம் இங்கு இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள்…. எம்பிக்காக மட்டும் இந்த தேர்தல் நடக்கவில்லை.  எம்பிக்கள் சரியில்ல, சட்டமன்ற உறுப்பினர்கள் சரியில்ல, மாமன்ற உறுப்பினர்கள் சரி இல்ல, இந்த சிஸ்டத்துல யாருமே வேலை செய்யாத காரணத்தால் சென்னை ஸ்தம்பித்துக் கொண்டு இருக்கின்றது என தெரிவித்தார். 

Please follow and like us:

You May Also Like

More From Author