2026 தான் டார்கெட்…! நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பு…!!

Estimated read time 0 min read

நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழி வகுப்பதுதான் நமது இலக்கு இலக்கு.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பின் வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளில் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

இடைப்பட்ட காலத்தில் எமது கட்சி தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி அமைப்பு ரீதியாக அவர்கள் தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும்.தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கம் பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்கான விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நாம் போட்டியிடவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுகுழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக என்னை பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலில் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து கொள்ள கொள்ள, எம்முன்னோர் பலரிடமும் பாடங்களை படித்து, நீண்ட காலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.

எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல. அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். என் சார்பில் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம்… நான் சார்ந்த கடமையை கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியல் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக இருக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author