27ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வாங்க அண்ணாமலை அழைப்பு.!!

Estimated read time 1 min read

232 தொகுதிகளை கடந்து விட்டோம்! கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம்.என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நம்முடைய “என் மண் என் மக்கள்” யாத்திரை இன்றோடு 232 தொகுதிகளை கடந்திருக்கின்றோம். சற்று நேரத்திற்கு முன்பு 232வது தொகுதியாக மதுராந்தகத்தை கடந்துவிட்டு நாளை மறுநாள் திருப்பூரிலே காலையில் 233 – 234 வது தொகுதியை கடக்க இருக்கின்றோம். இந்த கடுமையான பயணத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நம்மோடு சகோதர, சகோதரிகள், தாய்மார்கள், பொதுமக்கள், மாற்றத்தை விரும்பக் கூடியவர்கள், இளைஞர்கள், பெரும் திரளானவர் பெரிய ஊக்கத்தை, நம்பிக்கையை கொடுத்து, கூடவே வந்திருக்கிறீங்க.. மிகப்பெரிய ஒரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றீர்கள்.

தமிழக அரசியலில் இத்தனை காலமாக நாம் எதிர்பார்த்த மாற்றம் நிச்சயமாக 2024 பாராளுமன்ற தேர்தலில் நடக்கப்போவது என்பது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு பக்கம் மோடி ஐயா உடைய அற்புதமான ஆட்சி, மற்றொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியினுடைய கடுமையான உழைப்பு, இன்னொரு பக்கம் தமிழக மக்களுடைய நேர்மையான அரசியலுக்கான இயக்கம். இந்த மூன்றும் 2024-ல் ஒரு வெற்றி ஆண்டாக மாற இருக்கிறது. என்னோட அன்பான வேண்டுகோள் உங்களுக்கு.. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பயணம் செய்தவர்கள், யாத்திரையை பார்த்தவர்கள், அன்பு மழை பொழிந்தவர்கள், யாத்திரைக்கு உதவியவர்கள், யாத்திரையை பார்க்க முடியாமல் சில நேரத்தில் தவறவிட்டவர்கள், உங்கள் அனைவரையும் அன்பு தம்பியாக நிறைவு நிகழ்ச்சி பல்லடத்திற்கு 27ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நீங்கள் வரவேண்டும் என்று அன்போடு உங்களை அழைக்கிறேன்.

இது உங்களுடைய விழா, இது அண்ணாமலை யாத்திரையோ, பாரதிய ஜனதா யாத்திரை இல்லாமல் மக்கள் இயக்கமாக, ஓர் எழுச்சி மிகுந்த பயணமாக நாளை நமது என்கின்ற நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரு வெற்றி விழாவாக பல்லடத்தில் இருக்க வேண்டும் என்று நான், நாங்கள், கட்சி, பொதுமக்கள் எல்லோரும் விரும்புகின்றோம். என்னுடைய தனிப்பட்ட முறையில் ஒரு அழைப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு ஒரு தமிழ் சகோதர,சகோதரியும் நான் அழைப்பதாக ஏற்றுக் கொள்ளுங்கள். பல்லடத்திற்கு வாருங்கள்.. 27ஆம் தேதி 2 மணிக்கு நம்முடைய பிரதமர் அவர்கள் சரியாக விழாவில் இருப்பாங்க.

அவர்களுக்கு உங்களுடைய ஆசிர்வாதத்தை கொடுங்க. அன்பை கொடுங்க.. உங்களோடு நாங்கள் இருக்கின்றோம் என்று உரக்கச் சொல்லுங்கள். நீங்கள் வருவீர்கள் என்று நம்பிக்கை எனக்கு இருக்கு.. 232 தொகுதி என்னோடு வந்திருக்கிறீர்கள். கஷ்டத்தில் என்னுடன் வந்திருக்கிறீர்கள். மிகப்பெரிய எழுச்சியை என்னோடு சேர்ந்து உருவாக்கி உள்ளீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன். நிச்சயமாக இதை முடித்து காட்டுவோம். எடுத்திருக்கக்கூடிய பணியை வெற்றிகரமாக நடத்தி காட்டி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொடுப்போம். நாளை நமது.. பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்” என தெரிவித்துள்ளார்.

232 தொகுதிகளை கடந்து விட்டோம்!

கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம்.

பிப்ரவரி 27 ஆம் தேதி உங்களை பல்லடத்தில் சந்திப்போம்.

இதுதாங்க நேரம் – இனி எல்லாம் மாறும்!

We have crossed 232 constituencies

Waiting to cross the last two constituencies along… pic.twitter.com/Ku2j70JszY

— K.Annamalai (@annamalai_k) February 25, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author